காதல்

அன்பே
பூமியில் நான்
சொர்கத்தை பார்க்கிறேன் என்றால்_அது
என்தன் மீதான
உந்தன் பார்வைதான்...!
காதல் தேசத்தில்_எந்தன்
ஜனனம் என்பது
நீ என்னை
கடந்து செல்லும் தருணங்களில்தான்...!
நான் வாழும்போதெ
ஏற்றுக்கொண்ட மரணம் என்பது
நீ சிந்திச் செல்லும்
புன்னகைதான்...!
உனக்காக காதிருப்பதும்
உன் பார்வைக்காக
ஏங்கி நிற்பதும்
முட்டாள்தனம் என்றால்
அதையே நான்
காலம் முழுதும்
செய்துகொண்டிருக்க ஆசைப்படுகிறேன்...!
இனி
நீயில்லாத ஒரு வாழ்க்கை_இந்த
பூமியில் எனக்கு தேவையில்லை....!
உன்னோடு சேர தடையிருந்தால்_இந்த
பூமியே எனக்கு தேவையில்லை....!

எழுதியவர் : புனவை பாக்யா (26-Oct-10, 11:59 am)
சேர்த்தது : bakya
Tanglish : kaadhal
பார்வை : 419

மேலே