மாயன் காலண்டர்

மாயன் காலண்டர் முடிகிறதால்
உலகம் முழுதும் அழிகின்றதாம்
சந்திரனை விழுங்கி
சாதிக்க பார்க்கும்
மனித குலத்தினை மாயன்
வந்து மதிமயக்குமோ

அணுவை பிளக்கும்
அமெரிக்காவும்
அச்சபடுகின்றதாம்
என்ன வேடிக்கை

மனிதன் மனிதனாக
இருந்திடவே
இறைவன் ஜோதிடம்
என்று எல்லாம்

அதுவே
எம்மை பயமுறுத்தினால்
மாயன் என்ன பேயன்
என்றாலும்
அஞ்சுவதில்லை

நாங்கள் அடைய வேண்டிய இலக்கு
வானுக்கும் உயரமாய் உள்ளது
எங்களுக்கு நாட்காட்டியும் வேண்டாம்
நல்ல நேரமும் வேண்டாம்

எழுதியவர் : (8-Dec-12, 8:44 pm)
பார்வை : 176

மேலே