என்ன வளம் இல்லையிந்தச் செந்தமிழ் மொழியில்

தமிழ் என்றும் எங்களுக்கு உயிர் மூச்சு,
தமிழின்றி வேற்று மொழியில் வேறென்ன பேச்சு,
தமிழ்தான் எமது வளமான மொழி ஆச்சு – அதுவே
தனித்தமிழ் செம்மொழி ஆச்சு!

தமிழ்மொழியாய் நீ வாழ்ந்து உயர வேண்டும்,
தாய்தந்தை உனைப் பார்த்து மகிழ வேண்டும்!
தேமதுரத் தமிழோசை எங்கும் பரவ வேண்டும்,
தமிழாலே நாம் பெருமையுடன் வாழ வேண்டும்!

முன்னேற்ற கருத்தினில் தமிழை வைத்து,
முயன்றால் நம் நாட்டில் வடமொழிக்கு இடமேது!
தமிழ்நாட்டிலே தமிழ் வளர்த்து - என்றும்
தலை நிமிர்ந்து வாழ்வோம் நமக்கு இணையேது!

அமிழ்தாய் பலசிறப்பும் நாம் பெற வேண்டும்,
அகிலமெல்லாம் நந்தமிழ் புகழ் பேச வேண்டும்!
நாடும், நற்றமிழர் ஏடும் தமிழைப் போற்ற வேண்டும்,
நலமாய்த் தமிழரெல்லாம் வாழவேண்டும்!

என்ன வளம் இல்லையிந்தச் செந்தமிழ் மொழியில்
ஏன் கையை ஏந்தவேண்டும் வடமொழி இடத்தில்!
தமிழில் நல்ல நல்ல பெயர்களையே வைப்போம்,
வீட்டினிலும் நாட்டினிலும் தமிழில் பேசுவோம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-12, 4:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

மேலே