கன்னியின் கண்ணீர்!
என் அழகா?
என் குரலா?
என் அறிவா?
என் குணமா?
எதைக் கண்டான்.
பின் தொடர்ந்தான்.
காதல் என்றான்.
கண்ணீர்விட்டான்.
கைபிடிக்க
ஆசைபட்டான்.
காத்திருக்க
மறுத்துவிட்டான்.
எனக்கு மட்டும்
நீ என்றான்.
இல்லை என்றான்
சா!(வு) என்றான்.
அட்சதைகள்
தூவும் கையால்
அமிலத்தை
எறிந்துவிட்டான்.
அழகான
முகப்பொழிவை
அகோரமாய்
மாற்றிவிட்டான்.
ஆறுமாத
தண்டனையை
அனுபவித்து
வெளிவருவான்.
பலபேர் பின்
பின்தொடர்வான்.
என் நிலைமை
என்னாகும்?
துப்பாக்கி கிடைக்காது
கடையினிலே
துளை போட்டு
உயிர் குடிக்கும்
ஆயிதமாம்.
வெடிகுண்டு விற்காது
கடையினிலே
வெடித்து விட்டால்
நிச்சயமாய்
பேரழிவாம்.
அமிலங்கள் விற்பனைக்கு
கடையினிலே
அழகான பெண் முகத்தை
அழித்திடவோ?
அதன் மூலம் பழிதன்னை
தீர்த்திடவோ?
கன்னி அவள் கண்ணிழந்தாள்.
காதல் பெயரால் வாழ்விழந்தாள்.
தடை போட்டு பலவருடம் ஆனபோதும்
தங்குதடை இன்றி அமிலங்கள் விற்பனைக்கு.
முறையாக சட்டத்தை பேணாமல்
முறைகெட்ட சமுதாய சீர்கேடு.
(காதலிக்க மறுத்ததால் திராவகத்தை அந்த பெண்ணின் முகத்தில் வீசி எரிந்து கண்கள் இரண்டும் குருடாகி முகமும் முன்னழகும் சிதைந்து உயிருக்கு போராடும் பெண்பற்றிய படைப்பு.)