யார் காதலி??
என் கவிதைகளுக்குத்
தெரியாது,
நான் எழுதுவது
உன்னைப் பற்றிதான்
என்பது...
ஒவ்வொரு எழுத்தாய்,
ஒவ்வொரு வார்த்தையாய்,
ஒவ்வொரு வரியாய்
வடித்த
மொழிகள் உன்னைப்
பற்றியே...
உன்னை நான் பார்த்ததும்,
என்னை பார்க்க நீ
மறுத்ததும்,
பார்த்தால் மறைத்ததும்,
உன் வருகைக்காக
காத்திருந்து கண்டபோதும்,
காணமுடியாமல்
ஏங்கியபோதும்,
நானாய் உன்னைக்
காதலிப்பதும்,
நீ என்னை கனவில் மட்டும்
காதலிப்பதும்,
தெரிந்தால்
அந்த கவிதைகளும்
உன்னைக்
காதலிக்க
தொடங்கிவிடும்...!