லாரிகள் நிறைந்தோடும் காவிரி......

லாரி நிறைந்தோடும் காவிரி......
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

“புதுசாஇருக்கீங்க எப்ப வந்தீங்க…?”
“இன்னைக்குதான்...”
”எப்படி?”
“ஆக்ஸிடெண்ட்...”
”ஸ்பாட்டா?”
”இல்ல... ஆஸ்பத்திரியில தான்...”
“ஊரு...?”

“திருச்சி”
“அட நானும் திருச்சிதான்...சரி, இப்பெல்லாம் காவிரியில மணல் எடுக்கிறது இல்ல தானே...”
“இல்லையே வழக்கம் போல அவங்க கொடுமை நடந்துக்கிட்டுதான் இருக்கு...ஏன்?”
“அய்யயோ நான் அவ்ளோ கஷ்டப்பட்டதும் வீணா போச்சா?”
“என்ன சொல்றீங்க?”
“மணல் கொள்ளையை தடுக்கிறதுக்கு நாங்க நாலுபேரு செர்ந்து பொதுமக்களைத்திரட்டி ஆத்துல இறங்கி லாரியை தடுத்தோம்..அப்போ ராத்திரி ஒருமணி இருக்கும்..நான் தான் லாரிக்கு முன்னால படுத்தேன்...நல்ல இருட்டு.. அவனுங்க என்னென்னமோ சமாதானத்துக்கு வந்தாங்க... நாங்க போராட்டத்தை விடலையே... அப்போதான் ஒரு போன் வந்தது... மொட்டை பாலு தெரியுமா?”
“அவந்தான் இப்போ நகர செயலாலரு...”
“கொடுமை..கொடுமை... அவந்தான்...இவனுங்க சொன்னா கேக்க மாட்டானுங்க காவேரிதாய்க்கு பலி கொடுத்து ரொம்ப நாளாச்சி.. ஏத்துடா சண்முகம் லாரியன்னான்...நான் அசரலியே... கழுத்துல ஏறுச்சி லாரி... ஸ்பாட்டுலயே...”
“அய்யயோ அது நீங்கதானா….?”
”போராட்ட மெல்லாம் நடந்து... மணல் கொள்ளையை தடுத்திருப்பாங்களே...?”
”போராட்டம் நடந்ததென்னவோ உண்மைதான்.. ஒருவாரம் ஸ்டேட் புல்லா உங்கள பத்திதான் பேச்சு..நிறைய பொராட்டம் நடந்தது...அப்புறம் நம்ம ஊருல சும்மா ஒரு மாசம் இதையே பேசிக்கிட்டு இருந்தாங்க... கொஞ்ச நாள் இல்லாம இருந்தது அப்புறம் வழக்கம் போலதான்..”
”ச்சே... இதுக்கா பொண்டாட்டி புள்ளைங்கள நடுத்தெருவுல விட்டுவந்தேன்...கொஞ்சம் கூட குறையலயா?”
”ம்ஹும்..நேத்து நானும், மணல் லாரியில அடிபட்டுதான் செத்தேன்...”

............ஆண்டன் பெனி

எழுதியவர் : ............ஆண்டன் பெனி (10-Dec-12, 3:53 pm)
பார்வை : 268

மேலே