எல்லோரின் பார்வைக்காகவும்...

இந்தத் தளத்திற்கு வந்து செல்கிற அனைவருக்கும் என் வணக்கங்கள்.

இதில்...யாரையும் கை தூக்கி நிறுத்துவதோ..புகழ்வதோ...வெகு நிச்சயமாய் என் வேலை இல்லை. அதற்கு இந்தத் தளத்தில் உள்ள
படைப்பாளிகளுக்கு...எந்த அவசியமும் இல்லை.

இருந்தாலும்...நேரமின்மையின் காரணமாக நாம் எளிதில் தவற விட்டு விடுகிற ஒரு மிகச் சிறந்த படைப்பாளியைக் குறிப்பிட்டு...அவரின் படைப்புக்களை எல்லோரும் படித்து...வாழ்வின் நிதர்சனங்களைப் பற்றிய அவரின் பார்வைகளை எல்லோரும் அறிய வேண்டும் என்பதுதான் என்
விருப்பம்.

வயதில் மிகச் சிறியவர் ஆனாலும்...படைப்பின் வீரியத்தால்..வெகு உன்னதங்களைத் தனதாக்கிக் கொள்ளக் கூடிய ஒருவர் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இதை எனது மிகுந்த விருப்பத்தின் பெயரில் செய்கிறேன்.

உன்னதங்களைப் படைக்க என்னால் இயலாவிட்டாலும் ...
அடையாளம் காட்டுவது கூட என் மிகப் பெரிய கடமை என்றே நான் கருதுகிறேன்.

நான் இந்தத் தளத்தில் படிக்கவும்...படைக்கவும்...
தொடங்கிய நாள் முதல் எவர் ஒருவரின் கவிதை...என்னைத் தீரா உணர்வுகளுக்கு ஆட்படுத்தியதோ...அவரை எல்லோரின் பார்வைக்காகவும் குறிப்பிடுவது ஒரு சக
எழுத்துத் தோழனாக எனது கடமை என்றே கருதுகிறேன்

இதில் நான் மிகுந்த....மிகுந்த...பெருமைக்கு உள்ளாகிறேன்.


எனது...பெரு மதிப்பிற்குரிய அந்த..படைப்பாளி....


திரு. அகர முதல்வன் அவர்கள்.

இருபது வயதே நிரம்பிய...அசாத்தியமான படைப்பாளி.
எல்லோரும் அவரைப் படிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.

அன்புடன்...ரமேஷ்.

எழுதியவர் : rameshalam (11-Dec-12, 7:52 pm)
பார்வை : 152

மேலே