மகா கவிக்கு மரணம் இல்லை

பாட்டுக்கு ஒரு புலவன்
பாரதி என்று
கவிதைக்கு மட்டும்
அவனை சொந்தமாகி
விடாதீர் !
அவன் நாட்டுக்கு
ஒரு புலவன்

ஆங்கிலேய அதிகாரத்தை
அவன் கவிதைகள்
பீரங்கி குண்டுகளாய்
துளைத்து எதிர்த்தன !

பெண்ணடிமை
பேதம் பார்க்கும்
சாதி கொடுமை யென
அவன் கவிதை வரிகள்
வெடித்து சிதறியது ஏராளம் !

யானை மிதிக்கவில்லை என்றால்
அந்த ஆணை
யார் நெருங்கமுடியும் ?

அந்த புலவன்
பூமிதனில் அடக்கமாகி விட்டதாக
சிலர் புலம்புகின்றனர்

இல்லை ,
நம் சுதந்திர மூச்சில்
அவன் வாழ்கிறான் !
ஒழிந்து போன
பெண் அடிமை புரட்சியில்
அவன் இன்னும் வாழ்கிறான் !

இன்னும் உயிர்ப்புடன்
இருக்கும் அவன் கவிதை வரிகளில்
அவனை உயிருடன்
காண முடிகின்றது !

கவிதைக்கு அழிவில்லை
அந்த மகா கவிக்கும்
மரணம் என்பது இல்லை !

எழுதியவர் : (11-Dec-12, 8:07 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 137

மேலே