இயர்க்கை அன்னையின் வரம்,,,,,,,,,

நீல வானம் அதில் சிறுகுழந்தையாய் தவளும் வெண் நிலவு ........ தன் கடமையை தொடங்க மலை மகளின் மடியிலிருந்து மெல்லமெல்ல எழுந்து வரும் அதிகாலைக்கதிரவன்......... அதன் ஒளி பட்டு மெல்ல கண்சிமிட்டி பார்க்கும் பூக்களின் மேல் உள்ள பனித்துளி ................... கொத்து கொத்தாய் பூத்த அழகிய மலர்கள் ..........அதன் அழகை கண்டு கிறக்கம் கொள்ளும் மெல்லிய தென்றல் ............தென்றலின் இசையில் மயங்கி நடனமிடும் மரங்கள் ............அதன் வாசம் கண்டு மதுவருந்த வரும் வண்டினங்கள்.......... இதனை மெருகூட்ட கானமிசைக்கும் கருங்குயில்கள் ........அதில் மையல் கொண்ட மயில் ஆடும் அழகிய நடனம் .............இது எங்கள் இயர்க்கை அன்னையின் அன்பளிப்பு

எழுதியவர் : கவிதை தேவதை. (12-Dec-12, 12:04 pm)
பார்வை : 645

மேலே