எனக்குள்ளே

இந்து கடவுள் ஒருவன்
இடப்பக்கம் பெண்ணுமாக
வலப்பக்கம் தானும்
இருகின்றானாம் அதைப்போல
நானும் பெண்ணும் இருக்க வேண்டுகிறேன்


தனியாக இருக்கும் பெண்ணை காதலிக்காமல்
தன்னோடு இருக்கும் அவளையே காதலிப்பேன்
ஏனெனில் இன்னொரு முறையும்
ஏமாற எனக்கு விருப்பமில்லை

ஆகவே இனி வரும் பிறவியில்
ஆணும் பெண்ணுமாய்
அவதரிக்க வேண்டுகிறேன்
அனைத்து மனிதர்களும் என்னைப்போலவே

எழுதியவர் : .'. கவி (27-Oct-10, 2:50 pm)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : enakulle
பார்வை : 608

மேலே