என்றும் அன்போடு வாழுங்கள்.....
புது மண வாழ்க்கையை
புதிதாய் ஆரம்பிக்க
அடி எடுத்து வைத்த நீ
இரண்டொரு வாரத்தில் , அகம்
அடிபட்டு அல்லவா வீழ்ந்தாய்
விளையாட்டு பேச்சு
வினையாய் போனதே..
விட்டுகொடுக்கும் தன்மை விட்டு போனதால்
விவாதமும் வீண் பேச்சுமாய்
விண்ணை தொட்ட
வீம்புகளால்,
வார்த்தையால் குத்திய அம்புகளால்
வீணாய் போனதென்னவோ
உன் வாழ்க்கையும்,
ஒரு பெண்ணின் வாழ்க்கையும்
அறிவிழந்து ஆத்திரத்தோடு
அவள் செய்த ஒரு செயலாலே
சிறை கைதியாய் உள்ளே
மூன்றிரவு, ஓர் மூலையில்
உறக்கம் இழந்து உள்ளம்
குமுறிகொண்டிருந்தாய்...
வெளி வந்ததும் வெட்டி விடவே
நினைத்து விட்டாய்,
விவாகரத்து செய்யவே
துணிந்து விட்டாய்....
அறிவிழந்து அவள் செய்த தவறிற்கு
மன்னிப்பு இல்லையா?
அளவிற்கு அதிகமாய்
உன்னை நேசித்த அவளிற்கு
நீ கொடுக்கும் பரிசு இதுதானா?
தன் தவறை உணர்ந்து
உன்னை மட்டுமே
விரும்பி வரும் மனதிற்கு
உன்னோடு வாழ வாய்ப்பு இல்லையா?
உன்னோடு சில நாட்கள்
வாழ்ந்த பேதை அவள்
உன்னோடு வாழ தெரியாத
வஞ்சி கொடி
வாழாவெட்டி எனவே
பெயரெடுத்து, வாழ்விழந்து
வருத்ததோடு செய்த தவறை
நினைத்து நினைத்து
வருந்தி வாழும் ஓர் பெண்மை
இல்வாழ்க்கை அறியாத
இன்பம் அனுபவிக்காத இல்லாள்,
இத்துணை துன்பம் அனுபவித்து,பல
இடர்பாடுகளை
இயன்றளவும்,
இன்றளவும் சமாளித்து
தனியே வசிக்கும்
தாமரை மலர்தான் அவள்...
ஒன்று இரண்டு முறை
பார்த்து பழகியே
உன்னிடம்,
மனதை பறிகொடுத்து
மறுகி நிற்கிறேன் நான்...
மார்க்கம் ஒன்று தெரியாமல்
பாவம் அந்த பைந்தமிழ்
மனதோடு உடலையும்
உன்னிடம் கொடுத்து
மாங்கல்யம் சுமந்து
மனதோடு பேசி நிற்கிறாள்
மன்னவன் உன் கைகோர்க்க..
முகம் தெரியாத
மங்கை அவள்
எங்கோ வசிக்கிறாள்...
என் நினைவிலே
மலர்கிறாள்...
இன்று நானும்
கண் கலங்கி
நிற்கின்றேன்...
அவளை நினைத்து..
அவள் செய்த தவறால்
இன்று என் உள்ளமும் நொந்து..?
பெண்ணால் தானோ
ஒரு பெண்ணிற்கு பிரச்சனை..?
பாசமுள்ள பெண்டிர்களே
என் இனமே...
தீராத கோபத்தோடு
ஆண்மகனை
தண்டிக்கிறேன் என கூறி
இன்னும் ஓர் பெண்ணின்
வாழ்வினை கெடுத்து விடாதீர்கள்....
மனம் கலங்கி நிற்கதியாய் நிற்க வைத்து விடாதீர்கள்....
அன்பிற்கு, அடங்காத
அடிமையாகாத
உள்ளம் ஏது?
உரிமையான
உன்னதமான
உயிரிடம்
அடிமையாகி விடுங்கள்
அச்சம் இன்றி
அன்போடு வாழுங்கள்....
-PRIYA