தமிழர்கள் சூட்டிய கடல் பெயர்கள் :

"பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of Erythrean sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் கடல் வாணிபம் குறித்த முக்கிய வரைபடம் குறிக்க பட்டுள்ளது . எரித்ரயென் கடல் என்பது இன்று நாம் சொல்லும் இந்து மா சமுத்திரம் . இந்து மா சமுத்திரம் வழியாக கடல் வாணிபத்தை குறிக்கும் வரைபடம் அது. அகவே முதலாம் நூற்றாண்டில் எரித்ரயென் கடல் என்று இந்து மா சமுத்திரம் அழைக்கப்பட்டது உறுதி ஆகிறது. இப்பொழுது "எரித்ரயென் சீ" என்ற வார்த்தையின் தன்மையை ஆராயும் பொழுது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

பெயர் : எரித்ரயென் சீ
பெயர் காரணம் : அந்த கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அது அழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம் அந்த பூஞ்சையின் அறிவியல் பெயர் (Trichodesmium erythraeum Algae) ட்ரைகோதேசமியும் எரித்ரயெயும் பூஞ்சை. இதனால் இந்தவகை பூஞ்சை வளரும் கடல் என்பதால் இந்த கடல் அப்பெயர் பெற்றதாக கூறபடுகிறது.

என் கேள்விகள் :
இந்த வகை பூஞ்சை முதன் முதலாக கடல் மாலுமி குக்(Captain Cook) என்பவரால் 1770 ஆம் ஆண்டு தன பயணத்தின் பொழுது கவனித்து பின்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அறிவியல் பெயரிடப்பட்டது . அப்படி இருக்குமெனில் முதலாம் நூற்றாண்டில் உள்ள வரை படத்தில் எப்படி அந்த பெயர் இடம்பெற்றது ???

பின்பு இதற்கு தமிழ் விளக்கத்தை பார்த்தால் :
Erthraean sea = Ery + Thraen sea
எரித்ரயென் = எரி + த்ரயென்
Ery or Eri (எரி) = எரி என்பதன் அர்த்தம் நெருப்பு (burning or firing red in colour)

Thirai or Tharai- (திரை) = திரை என்பதன் பொருள் ''திரைகடல்'' ''அலைகடல்'' என்ற வார்த்தையில் இருந்து புரியும்(a screen or a wave)

எரி+திரை = எரிதிரை > எரித்ரை > எரித்ரயென் கடல்

Eri + thirai = Erithirai > Erythirai > Erythraean Sea

''எரியும் திரைகடல்'' என்று அழகாக சொல்லப்பட்ட இந்த கடலின் பெயர் காலபோக்கில் மறைந்து இந்து மா கடல் என்று மாற்றப்பட்டுள்ளது
(இது என் படைப்பு அல்ல)

நன்றி
கி . கோகுலகிருட்டிணன்

எழுதியவர் : abiruban (17-Dec-12, 5:16 pm)
பார்வை : 279

சிறந்த கட்டுரைகள்

மேலே