வினோதினியும் ஆசிட்டும்..! டிசம்பர் மாத கொடும் துயரம்..!
வினோதினியும் ஆசிட்டும்..! டிசம்பர் மாத கொடும் துயரம்..!
வினோதினிக்கு ஏற்பட்ட துயரமும், கொடூரமும் எவருக்கும் நடக்கக்கூடாதவை. சில மாதங்களுக்கு முன்னர் சென்னை நகரின் பேருந்து நிலையத்தில் அனைவரின் கண்முன்னே கத்தியால் குத்தி தான் விரும்பிய பெண்ணை கொலை செய்ததும் நடந்தது.
காதலை ஏற்க மறுக்கிற பெண்களை ஆசிட் வீசுகிற, கொலைசெய்கிற குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. காதல் மறுப்பிற்கு ஆசிட் வீச்சு தீர்வாகுமானால் நமது முகங்கள் எத்தனை முறைகள் கருகியிருக்கும். ஆசிட் வீசுபவர்கள் ஆண்களாகவும், வீசப்படுபவர்கள் பெண்களாகவும் இருப்பது ஏன்?
காதலை திரைப்படங்களிலிருந்தும், கதைகளிலிருந்தும் மட்டுமே அறிகிற நிலைக்கு காதலை தீண்டா, பேசா பொருளாய் மாற்றியிருக்கிறது நமது திருமண, குடும்ப, கல்வி முறகள். காதலை அறியவும், புரியவும், தெளியவும், அணுகவும், விலகவும், ஏற்கவும், மறுக்கவும் எப்போது கற்க போகிறோம்?
ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு இன்று 23-வது (16-12-12) பிறந்த நாள்.
படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு, இன்று பிறந்த நாள் என்று கூட சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை அவரது பெற்றோர்களுக்கு..
இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா..” என்று சொல்லும்போதே கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது அவரது தந்தைக்கு..
முகம்.. பார்வை இழந்து பகலா..இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி..
இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது நண்பர்களே..
காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதேனும், உதவி செய்ய விரும்பும் வாசகர்களுக்காக..
JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416
(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)
நன்றி
கவிஞர் முத்துக்குமரன்