மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை
மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை
அவளை மரணக்குழி அழைத்தது.அன்று.
சிறுகதை
லெட்சுமிஅழகான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவள் அழகான தோற்றமும் நிண்டகூந்தலும் மா நிறம் கொண்ட வெள்ளையும் அமையப்பெற்றவள்.அவள் மற்றப் பெண்களைப் போல சீரிப்பாயும் குணம் கொண்டவள் அல்ல. மிகவும் எளிமையான பண்பும் மற்றவர்களை கவரும் பேச்சு திறனும் கொண்டவள் .
அவள் திருமண பந்தத்தில் இணைந்தாள் அவளுடைய திருமண வாழ்கையில்(5)ஐந்து பிள்ளைகளைப் பெற்றால்.மூத்ததும் இரண்டாவதும் ஆண்பிள்ளை.மீதம் உள்ள (3) மூன்று பெண் பிள்ளைகள்.அவளுடைய கணவன் ஒரு விவசாயி.அவன் திடுக்கிடும் செய்தியை கேட்டால் விரக்தி அடைந்து விடுவான்.
எதிர்பாராத விதமாக ஒரு நாள் யுத்த விமானங்கள் தனது இரும்பிளான இறக்கையை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் வட்டமிட்டது.லெட்சுமி நினைத்தாள் .நம்மட நாட்டு அரசாங்கம் விமானம் புதுசா வாங்கியிருக்காங்க அதானால நம்ம நாட்டு மக்களுக்கு காட்டுவதற்காக பறக்கிறது என்று தன் பிள்ளைகளுக்கும் தன் கணவனுக்கும் அழகான பேச்சு தமிழில் சொன்னால்
யுத்த விமானம் (5)ஐந்து தடவை. வட்டமிட்டு தாழ்வாக பறந்தது. பறந்து (5)ஐந்து நிமிடங்கள் கழிக்கையில் லெட்சுமி வாழும் பக்கத்து ஊரில் குண்டு மழை பொழிந்தது.ஊர் எங்கும் கரும் புகை மண்டலமாய் மாறியது. அப்போதுதான் நினைத்தாள் லெட்சுமி நம்மட இனத்தை அழிக்க வந்த விரோதி என்று அவள் தன் மனதுக்குள் நினைத்தாள். சற்று (1) ஒரு நிமிடம் ஆகவில்லை அடுத்த யுத்த விமானம் (2)குண்டகளை அவள் வாழும் ஊரில் பொழிந்தது. அவளும் தன் பிளளைகளையும்.கணவனையும் அழைத்துக் கொண்டு தற்பாதுகாப்புக்காக நிலக்கீழ் சுரங்கத்துக்குள் ஒழிகிறால்(பங்கருக்குள்.ஒழிகிறால்)
ஆறு(06) யுத்த விமானங்கள் பெரிய இரச்சலுடன் ஊரை வட்டமிட்டு இருக்கிறது.அந்த வேளையில் கணவன் இடமும் தன் பிள்ளைகள் இடமும் கேட்கின்றால் நம்மட மூத்த அண்ணன் எங்கே?என்ற கேள்விக் கனையை தொடுக்கிறால் சற்று அங்கும் இங்குமாக தேடிப்பார்கின்றால் அப்போதும் யுத்த விமான் ஆகாயத்தை வட்டமிட்டு இருக்கிறது
அந்த வேளையில் பெற்ற மனசு சும்மா இருக்குமா? என் பிள்ளைதான் எனக்கு பெரிதென்று. அவள் தன் பிள்ளையை தேட புறப்படுகின்றால் அந்த வேளையில் தனது (4)நான்கு சின்னப் பிள்ளைகளையும் அவள் கட்டியிருந்த சேலையால் இறுக கட்டி மூடியபடி பரந்த வயல் வெளியில் அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து போகின்றால் கோழி பருந்தக்கு பயந்து தன்குஞ்சுகளை தன் இறகுக்குள் பாதுகாப்பது போல தன் பிள்ளைகளை பாதுகாத்துக்கொண்டு தன் மூத்த மகனை தேடப்புறப்படுகிறால்
அப்போது யுத்த விமானம் பெரிய இரச்சலுடன் ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டுயிருக்கிறது.அவள் தன் மனதுக்குள் தன் ஸ்ட தெய்வங்களை வேண்டுக்கொண்டு.தேடுகின்றால் சற்என்று வந்த விமானம் திடீர் என்று லெட்சுமியின் மீது குண்டை.போட்டது. வயல் வெளி புகைமண்டலாமாக மாறியது.விமானங்கள் குண்டுகளை பொழிந்த.பின் தனது இடங்களை நோக்கிப் புறப்பட்டது.
அப்போது மூத்த மகன் நினைக்கின்றான் நம்மட வீட்டுக்குப் பக்கத்தில் குண்டச்சத்தம் கேட்டது அம்மா அப்பா தம்பி தங்கைகளின் நிலை என்னவென்று தெரியாது. என்று அவன் ஒரு அச்சத்துடன் நினைத்துக்கொண்டு.அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து வருகின்றான்.அப்போது பார்த்தான் தன் தாயும் தன் உறவுகளும் 20(இருபது அடி ஆழ குழியில் புதையுண்டு சிதையுண்டு தண்ணீரும் இரத்தமும்.ஒன்றாக சங்கமித்து கிடந்தது.மகன் பார்த்து அழுது புரண்டான்.
அன்று மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை.மரணக்குழி அழைத்தது அவளை.அன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-