நினைவெல்லாம் நீ,,,
கனவுக்குள் தொலைந்த கவிதையை
களவெடுக்க முடியவில்லை
கவிதையும் நினைவில்லை ம்ம்
துள்ளும் முயலாய்
பனி படர்ந்த மரங்களினூடே
மலர்க் கூட்டங்களை
எட்டிப்பறிக்க முயன்றாள் ,,,
மின்கம்பத்தினூடே சாய்ந்துவிட்டு
உடமைகளை காற்றிலே
பறக்கவிட்டுவிட்டு
எங்கோ பறக்கிறது மனது
நேரமோ நிறம் மாறிக் கொண்டிருக்கிறது
தெரியவில்லை,,,
பறித்தவள் மலர்களோடு
காட்சிகளை பறித்துச் சென்றிருக்கலாம்
அடுத்த நாள்முதல்
ஆளில்லாத நெடுஞ்சாலை நிழற்குடை
அத்தனை அழகாக தெரிந்தது
"அவள்" ஸ்பரிசம் பூத்திருக்கக்கூடும்
காணாமல் போனவளுக்காய்
காத்திருப்பதைவிட
காதல் செதுக்கி போகலாம்
ஸ்பரிசமற்று உலரும் மரங்களினூடே
அனுசரன்