பதில்கள்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
பதில் : மத்த வாசனையெல்லாம் எனக்கு தெரியுமுன்னு எப்ப சொன்னேன்
புலி பசித்தாலும் புல்லை திங்காது
பதில் : எனக்கு பசிச்சப்ப பக்கத்துல வந்து எத்தன தடவ கொடுத்து பாத்த.
நாளைக்கு காலேல 10 மணிக்கு எனக்கு பசிக்கும், என் பக்கத்துல வந்து ஒரு தடவ
கொடுத்துபாத்துட்டு அப்புறம் சொல்லு
வெயிலின் அருமை நிழலில் தெரியும்
பதில் : அடேங்கப்பா எவ்வளவு பெரிய உண்மைய கண்டுபுடுச்சுட்ட. ஏன் நிழலின் அருமை வெயிலில் தெரியாதா. இத கண்டுபிடிக்க இன்னும் எத்தன வருஷம் ஆக போதோ.
பழக பழக பாலும் புளிக்கும்
பதில் : டேய் டேய் வேண்டா, பொறந்ததலேந்து சாகுரவரைக்கு என்னோட பழகுற,
ஒரு நாளைக்காச்சும் சொல்லிரிப்பியா புளிக்குதுனு. செத்த அப்புரம்கூட, பாலுனு சொல்லி ஒரு நாளைக்கு வந்து பழகிட்டு போறியே.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்
பதில் : ஆமா இப்ப யாரு இல்லனா
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்
பதில் : ஏன் மத்த வலியெல்லாம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு வந்தாதான் தெரியுமா,
சொரண கெட்டவனே
உப்பை திண்னவன் தண்ணி குடிக்கணும்
பதில் : ஏன்டா சோத்த திங்காம உப்பை திங்கிற, திண்ணுபுட்டு தண்ணிய குடிக்காம
பீரையா குடிப்ப
உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்
பதில் : என் நண்பன் யாருன்னு சொன்னா அவனபத்தி சொல்லு ஏன் என்னப்பத்தி
சொல்லுற , நீ என்ன செவுடா, இல்ல லூசா
பாம்பின் கால் பாம்பறியும்
பதில் : கண்ணில்லாத கபோதியே எனக்கு காலே கிடையாது, ஒரு நல்ல
டாக்டரை பாத்து உன் கண்ண செக் பண்ணிக்கு
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
பதில் : இப்ப புரியிதா, மத்தவங்க கொடுத்த வரமுனு சொன்னா அவங்ககிட்டபோய் இதபோயி என் தலையில காட்டிபுட்டன சன்டைக்கு போவ, இப்ப இறைவன்கிட்ட
உன்னால சன்டைக்கு போக முடியுமா
டாக்டரிடமும் வக்கீலிடமும் உண்மையை சொல்ல வேண்டும்
பதில் : பொய் சொன்னாலும் உடமாட்டோ, சுத்தமா புடிங்கிட்டுதான் அனுப்புவோம்
கணவனே கண் கண்ட தெய்வம்
பதில் : இப்ப புரியிதா ஏன் உங்கள அடிக்கும்போது கண்ண மூடிக்கிட்டு
அட்க்கிறோமுனு.
அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்
பதில் : அடிக்கினுனு முடிவுப்பண்ணிட்ட அப்புற என்ன அடுக்குமொழி
(நகைசுவைக்காக எழுதப்பட்டது,
கோபித்துகொள்ளாதீர்கள் )