ஜேம்ஸ் பாண்ட்

தொடர் வண்டியில் நம் ஆந்திர நண்பர் ஒருவர் பயணம்.
வண்டியோ மிக வேகமான ஓட்டத்தில்.

திடீரென்று பாய்ந்து வந்து ஏறினார் ஒருவர்.
மூச்சு வாங்கி, இருக்கையில் அமர்ந்தார்.

அவரிடம் நம் ஆந்திர நண்பர் வினவினார்.

ஆமாங்…
இவ்வளவு வேகமா…..
ஓடுர வண்டீல…
மூச்சிறைக்க…..
பாய்ஞ்சு வந்து ஏறீர்ங்களே….
ஒங்க பேர் என்ன சார்..?

சற்றே மூச்சு வாங்கிய பிறகு,
நிதானித்து, ஏறி அமர்ந்தவர்….

“பாண்ட்…..” என்று சொல்லி …
மூச்சு வாங்கி….
பிறகு...

“ஜேம்ஸ் பாண்ட்” என்று முடித்தார்.

சற்று ஆசுவாசப்பட்ட பின்
இந்த நபர்
நமது ஆந்திர நண்பரிடம்
நிதானமாக கேட்டார்.

“ஒங்க பேர் என்னா சார்…?”

நமது ஆந்திர நண்பர்
ஜேம்ஸ் பாண்டின் படங்களை
அதிகம் ரசித்து பார்க்கும் ஆர்வம் கொண்டவர் !

பெயரைக் கேட்டதும்,
தனக்குள் உறங்கிக் கிடந்த ஜேம்ஸ் பாண்டை
தட்டி எழுப்பி விட்டார்.

சொன்னார்…..


எம்பேர்…

ராவ்,

--சிவராவ்,
--சதா சிவராவ்,
--சுப்ப சதாசிவ ராவ்
--வெங்கடசுப்ப சதாசிவ ராவ்,
--ராஜசேகர வெங்கடசுப்ப சதாசிவ ராவ்
--ஆஞ்சனேய ராஜசேகர வெங்கடசுப்ப சதாசிவ ராவ்

--சீதாராம ஆஞ்சனேய ராஜசேகர வெங்கடசுப்ப சதாசிவ ராவ்

--விஜயவாடாலூ சீதாராம ஆஞ்சனேய ராஜசேகர வெங்கடசுப்ப சதாசிவ ராவ்

--லட்சுமிகாந்த விஜயவாடாலூ சீதாராம ஆஞ்சனேய ராஜசேகர வெங்கடசுப்ப சதாசிவ ராவ்





ஜேம்ஸ் பாண்ட் என் பக்கத்து வீட்டுக்காரர்.
மாடி ஏறி என்னைப் பார்க்க வந்தவரைப் பார்த்து,
என் வீட்டுக்குப் புதிதாக வந்தவர் கேட்டார்

“ஒங்க பேர் என்ன சார்?”

படாரென்று சொன்னார்…

”ஜேம்ஸ் பாண்ட்!”

எனக்கு ஆச்சரியம்….
எப்படி இவரிடம் இப்படீ ஒரு மாற்றம்?

விசாரித்தேன்….

அந்த ஆந்திர நண்பர்
இன்னும் தன் முழுப் பெயரையும்
சொல்லி முடிக்கவில்லையாம். !! !!..!!....??...??

அதனால்
அவர் மேல் கொண்ட பரிதாபத்தின் பொருட்டு

இனி யார் இவரிடம் பெயர் கேட்டாலும்

ஒரே மூச்சில்

“ஜேம்ஸ் பாண்ட்”

என்று சட்டென்றுதான் சொல்லப் போகிறாராம்.

ம்ஹூம்…… நீங்களே சொல்லுங்கள்…….

யாரைப் பார்த்து பரிதாப்பட இந்த மங்காத்தா …..?!!!

எழுதியவர் : மங்காத்தா (19-Dec-12, 2:38 pm)
பார்வை : 390

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே