என்று முடியும் இந்த ஆணின் வேட்கை?
அன்பை ஊற்றி அழகாய்க்
கேட்டால் தருவேன்
காதல்
அமிலம் ஊற்றிப் பறிப்பதா?
உத்தமியில்லையாம் இரவில்
வெளியே செல்பவள்
புத்திபுகட்டச் செய்தானாம்?
பலாத்காரம்
உன்னாசைக்குப் பலியாகவா
பெற்றால் என் அன்னை?
கனவுகள் நொறுங்கிக் குத்திக்
கிழிக்கின்றதென் மனத்தை
தாயே உன் பிள்ளைக்குச்சொல்
பெண்ணை பெண்ணாய்ப் பார்க்க..
அவள் ஆணின் தேவையைத்
தீர்க்கப் பிறந்தவள் அல்ல
தீர்க்கமாய் நின்று தன் வாழ்வை
உயர்த்தப் பிறந்தவள் என்று...