உறக்கம் துறந்த இரவுகள்....

நித்திரை உறக்கம்
விழிகள் மறுக்கும்.....
கொட்டும் பனியிலும்
கொட்ட கொட்ட விழிக்கும்....
சித்திரை மாதம்......
உன்னை பார்த்ததால்
நித்திரை இழந்தேன்......
கடும் வெயில் கூட
என்மீது மட்டும்
பனியை பொழிய.....
நித்தமும் உன் நினைவில்
சத்தமின்றி வந்து போகின்றன.....
நிலவும் இரவில்....
விடியும் என்றா..
விழிகள் விரிகின்றன...
உன் முகம் காணும் ஆவலில்
முழுதாய் தூக்கம் துறக்கின்றன ...விழிகள்..
காற்றும் கூட
என் நுரையிரல் சென்று
திரும்பும் பொழுது........உன் நினைவுகளை சுமந்து சுத்தமாக செல்கிறது.....
ஏதோ ஒரு
பாடல் கேட்கும் பொழுதெல்லாம்
நீதான் வந்து போகிறாய்
என் நினைவில்.....
பாடல் வரிகள் பதிவதில்லை
உன் நினைவு சுவடுகள்
பதிந்துவிடுகின்றன மனதில்.......
எத்தனை முறை
வாசித்தேன் தெரியவில்லை......
வள்ளுவனின் வாசகத்தை......
இன்னும் ஏழடி வரிகள்
என் நெஞ்சில் எட்டவில்லை...
ஒருமுறை கேட்ட
உன் விலாசம் மட்டும்
எப்படி ஒட்டிகொண்டது.....
உன்னால் துறந்த
உறக்கங்கள்....
உன்னாலே கிடைக்கட்டும்....
உன் ஒரே ஒரு
சொல்லில் தான் உள்ளது.
என் உறக்கம்
உன்னோடு கட்டிலிலா....? இல்லை
நீயன்றி கல்லறையிலா....? என்று....