இல்லறம்

நீ நினைத்தது எனக்கு தெரியும்
நீ நானாக இருக்கும்போது

நான் உணர்ந்ததை நீ உணர்வாய்
நான் நீயாக இருக்கும்போது

உள்ளத்தால் உணர்வால் ஒன்று பட்டு
நீ நான் நாமாக இருப்போம்

சிவனில் பாதி சக்தி
என்னில் பாதி நீ

நம்மை நாம் அறிவோம் இல்லறத்தின்
புனிதம் காப்போம் இல்லறம் நலறமாக

கோவை உதயன்

எழுதியவர் : (24-Dec-12, 5:44 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : illaram
பார்வை : 172

மேலே