நான் பிறந்த கிராமம்

பசுமை சூழ் கிராமங்கள் அதற்குள்
ஓர் குட்டிக் கிராமம் அறியா சமூகம்
சூட்டிய பெயர் பன்னமூலை ஆம்
நான் பிறந்த கிராமம்

பள்ளி செல்ல வசதி இல்லை
கலை இழந்த முகத்துடன்
கஞ்சிக்கு வழியின்றி
கட்ட ஏதும் துணியின்றி
கண்ட இடத்தில்
படுத்துறங்கும் பாவிகள்நாம்

கஞ்சி குடிக்க வழி இல்லையென்றாலும்
சந்தோஷசமாக வாழும்,
எங்கள் கிராமத்து வாழ்க்கை
வறுமையும்,பஞ்சமும் வாடியபோதும்
நெருடியது.வறுமையும், அறியாமையும்

வருடம் ஒரு முறை மாற்ற முடியாத
தென்னோலை மாளிகைக்குள் இருந்து
ஒரு நேரப் பசிபோக்க வானம் பார்த்த ஞாபகம்
ஈரத்துணியை வயிற்றில் போட்டு
அம்பிளிமாமா கதை சொல்லி
தூங்க வைக்கும் என் அம்மா

ஒற்றையடிப் பாதைகள் ஆலமரத்து நிழல்
மரங்களின் அசைவுகள் நல்ல
குயில்களின் தாலாட்டு ஜில்லென்று


திண்ணை வைத்த வீடும் உண்டு
திமிரிலாத பேச்சும் உண்டு
அலங்காரமில்லாத அழகிகள் உண்டு
அசைக்க முடியாத காதலும் உண்டு

எங்கள் கிராமம் அழகாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகளை குடிசை வீடுகளாகத்தான் பார்க்க முடியும்
நிறைய பூச்செடிகள் ,பெரிய மரங்கள் வீட்டை சுற்றி
வெட்டிய வாழக்கன்று துளிர் விடுவதை
பார்த்து சந்தோசப்படும் நாம்

கல்வி வாடையே வீசாத
எங்கள் கிராமத்தில்
இனி வரும் காலங்களில்
கல்வி மட்டுமே தென்றலாக வீச வேண்டும்

எழுதியவர் : (25-Dec-12, 1:25 am)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 179

மேலே