ஏன் வதைக்கிறாய்
பெண்ணாக பிறந்த நீ
ஏன் பெண்ணை
வதைக்கிறாய்
உன் மகனின்
திருமணத்துக்காக நீ
ஏன் இன்னொரு
பெண்ணை
பலியாக்கிறாய்
நாளை உனது
மகனிற்கு ஓர்
பெண்பிள்ளை
பிறந்துவிட்டால்
அவனும் அனுபவிப்பான்
இந்த வேதனையை
கொஞ்சம் சிந்தி
உன் மகனின் எதிர்காலத்தை