கடற்கரையோரம்

நம்ப மறுக்கிறது என் மனது
கரையோரம் நீ விட்டு சென்றது
கவிதைகள் அல்ல உன் காலடி
சுவடுகள் தான் என்று....

முட்டி மோதி சண்டை இட்டுக்கொண்டே
வந்தன அலைகள் கரையோரம்
நிற்கும் கள்ளி உனது பாதங்களை
முதலில் தொடுவது யார் என்கிற
பந்தயத்தோடு....

முதன் முறையாக குளிர்ச்சியை
உணர்ந்தது அலைகள் உன்
பாதங்களை தொட்டபோது...

அலைபாய்ந்த அலைகளின் மனது
அமைதியாய் கடல் திரும்பியது உன்
பாதங்களின் ஸ்பரிசத்தை தொட்ட பின்....

எழுதியவர் : (25-Dec-12, 2:06 pm)
பார்வை : 193

மேலே