ஒன்னும் புரியல சொல்ல தெரியல

கரு விழி ரெண்டில் கலவரம் மூட்டி
என்ன பாக்குறா- தினம்
என்ன தாக்குறா

காற்றினில் வீசும் கூந்தலில் என்னை
கொன்னு போடுறா- தினம்
கொண்டு போகுறா

கண்ணுக்குள்ளே கனவாக
கவி பாடுறா

நெஞ்சுக்குள்ள பல நூறு
சுகம் காட்டுறா

அவ கொக்கி போடும் பார்வ
என் நெஞ்ச கொத்தி கிழிக்க

அவ சொக்க வைக்கும் சிரிப்பு
என் தூக்கம் மொத்தம் பறிக்க

எழுதியவர் : thavam (26-Dec-12, 3:35 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 288

மேலே