காதல்...வலியின் மறுபெயர்
தனிமைக் காதல் கொண்டு வாழ்ந்து வந்தேன்,
எரியும் திரியைப் போல வீழ்ந்து நின்றேன்..
கண்கள் கண்ட ஆயிரம் கனவுகள்,
கண்ணீராய் வழிந்தது கழிவான உணர்வுகள்..
காதல் என்னுள் வந்ததும் ஏனோ,
கடந்த பிறவி சாபம் தானோ..
உன் மரத்த உள்ளம் மாறிடவே,
என் மறுபிறவியும் போதிடுமோ..
என்னை நாடும் உறவுகள் பலரிருக்க,
நான் தேடும் நீ மட்டும் விலகுவதேனோ..
ஈடும் இணை இல்லை அவள் அழகிற்கு,
ஈமம் செய்வதேனோ என் காதலுக்கு..
என் கவிதை பிடிக்குமென்றாய்,
கவி ரசனை பிடிக்குமென்றாய்..
தளிரே,
கவியும் ரசனையும் பிடித்தும்,
கவி பொருளும் கவிஞயனும் வெறுப்பதேனோ..
பகலில்,
இரவைப் பிரியும் நிலவைப் போல,
மங்கிப் போவேன் நானும் தான்..
உன் உறவை இழந்த சொகந்தன்னில்,
வெம்பிச் சாவேன் நானும் தான்..
எந்தத் தேடலும் இல்லா பெண்மை நீயோ,
எந்தன் தேடல் உனக்குப் புரிவதுமில்லை..
அது உனக்குப் புரியும் காலம் விடியும் வேளை,
பிரியும் சுவாசம் என் கூட்டிலினின்று..
காலம் கரைய கரைவேன் நானும்,
நான் கரையும் முன்னே கரைந்திடு நீயும்..
என் கண்ணீர்த் துளிகள் நிறையிருக்க,
உன் கல்நெஞ்சைக் கரைக்க அது போதுமானதே..
ஞாயிறைத் துரத்தும் இரவைப் போல,
உன் ஞாபகம் என்னைத் துரத்திடுதே..
மறைவான் சூரியன் மெல்ல மெல்ல,
அதுபோல,
நானும் மறைவேன் காலம் செல்ல செல்ல..
வலிகள் நிறைந்த காதலிது,
வெறுத்து நிற்கவும் வழிகளில்லை..
காதல் வளி வீச தள்ளாடி நிற்கிறேன்,
என் வலி போக வழிதான் என்னவோ..
நீ சென்றுவிடு தேவையில்லை,
அகன்றுவிடு சோகமில்லை..
எனக்குத் துணையாவாள் இன்னொருத்தி,
"உன் நினைவுகள்" என்று பெயர் கொண்ட பெண்ணொருத்தி..