முகவரி பதி...!

நண்பா...

கூட்டுப் புழுவாய்க்
குறுகிக் கிடந்தது
போதும்...
சிறையை உடை
சிறகை விரி...
உயரே செல்
விண்மீன் விழுங்கு
வானில் இல்லை
வரையறை
எத்திசையும் போ
எங்கே போயினும்
ஏற்றத்தை நாடு...!
காயங்களுக்கு
கண்ணீர் மருந்தாகா...
கழுவித் துடை...!
கல்...கற்பி...கற்றதில்...
நற்றதைப் பற்று
இருப்பதில்
இருப்பதைப் பார்...
இல்லாததே
இல்லையெனச் செய்..!
இருக்கும் வரை
இறப்பை மற
இறக்கும் போதும்
சிறப்பினைச் சேர்..
மறைந்தாலும் நீ...
மறையா வண்ணம்
முகவரி பதி...!

நட்புடன்...
சூரிய விழி!

எழுதியவர் : சூரிய விழி (27-Dec-12, 2:13 pm)
பார்வை : 148

மேலே