நான் விழுவேன், வீழ்ந்து !

பச்சையங்கள்
ஊறிக்கிடக்கும்
பசுமை - தாங்கி
நின்றது பயிர்,
நீருக்காய் ஏங்கி !
கண்கள் வீங்கி !

முளைவிட
முனைந்து நிற்கும்
எங்களை - மழையை
காரணம் காட்டி
கட்டிப் போட்டீர்கள் !
பதினோராவது மாதம்
கருப்பையில்
காத்துகிடக்கும் வலி
கருக்கும், பைக்கும் மட்டும்
தெரிந்த வலி - உமக்கு
புரியாது, இது தனி !

வானம் இறக்கபட்டு
இறங்கி வந்த
நாட்களில் நாங்கள்
விதைபடுகிறோம் !
முளைக்காமல்
இறந்துபட்டால்
உதை படுகிறோம் !

கலைகள் பிடுங்க
நீங்கள் வரும்போது,
எங்களுக்கு மரணபயம்
வருவதுண்டு - மிதித்து
சாக வேண்டி சாபம் - எம்
சகாக்கள் பெற்றதுண்டு !

நாங்கள் தண்ணீரில்லாமல்
மூச்சுத்திணரும்போது,
எங்களை அப்படியே
கிடத்திவிட்டு - நீங்கள்
அரசியல் வளர்க்கிறீர்கள் !
விளையாட்டு உட்பட
அரசியல் விளையாடாத
இடமில்லை போலும் !

சாவதென்னவோ
நானும் - என்னை
வளர்த்த விவசாயிம்தான் !
அவன் விளைவிக்காவிடில்
நீவிர் உண்ண எது உணவு ?
எப்படி வரும் உங்களுக்கு
வேறு ஆடம்பர கனவு ??

எனக்காக கருகும்,
கருகும் எனைக்கண்டு
கருகிச் சாகும் விவசாயின்,
விசும்பல் போக
நாங்கள் அழுதழுது
கண்ணீர் திரட்டிக் குடித்து
விளைவோம் - விவசாயிக்காக
வில்லாய் வளைவோம் !

எம்மினம்
அழியாமல்
உயிகாக்க - நீவிர்
வேண்டும் !
உயிரை மட்டுமாவது
உன்னோடு வைத்துகொள்
உழவனே !
செத்துமடிய வேண்டாம்,
வேண்டுமெனில்
சேர்ந்து மடிவோம் !
மரணதேவியின் மடி
நாடு - உன்மடியில்
நான் விழுவேன், வீழ்ந்து !

எழுதியவர் : வினோதன் (27-Dec-12, 1:11 pm)
பார்வை : 119

மேலே