நான் மறுத்த உன் முதல் காதல்.....!!

என் காதல் பெரிதென்று யோசித்து,,
மறந்துவிட்டேன் பெண்ணே
"நீ என் மேல் வைத்த காதலை"
"ஒருதலைகாதலாய்"
நீ வைத்தாய் என் மேல்,,
ஆனால் ஏனோ புரியவில்லை எனக்கு...!!

என்மேல் காதல் கொண்டு,,
அவள் பேசிய வார்த்தைகளை,,
சிந்தித்து பார்த்தேன் அவள் சென்ற பிறகு,
"சிறு சிறு துளிகளாய் சிந்தியது
அவளின் நினைவுத்துளிகள் கண்ணீர் துளிகளாய்"....!!

வஞ்சகனாய் வளர்த்து விட்டேன் பெண்ணே,,
என் மீது காதலை உனக்குள்ளே,,
பிழை செய்தேன் என தெரியும் தருணம்,
"நிற்கிறேன் குற்றவாளியாய் அவள் முன்னே"....!!

உன் முத்தம் தானடி பெண்ணே,,
"முதன்முதலாய் ஒரு பெண்ணிடம்,
நான் கேட்ட முத்தம்,,...!
எப்படி மறந்தேனோ,,
"அது காதல் முத்தம்" ...!!
என்று நினைத்து பார்க்காமல்....

என்னை எனக்கே உணர வைத்தாய் பெண்ணே,,
என்மேல் நீ கொண்ட காதலால்,,
என்னை முழுதும் தருகிறேன்,,
"எனக்கு கைமாறாய்
உன் இதயத்தில் இடம் கொடு" ...!
என்று நீ சொன்ன வரிகளால்...
ஆனால்,
நிமிடங்கள் பறந்து விட்டன,,
கைகளை தாண்டி
பறவைகளை போல பெண்ணே....!!

ஒரு பெண்ணாய் உன் காதலில்,,
நீ பெற்ற உறுதி உருகுலைத்துவிட்டது என்னை,,
உன் காதலை நான் உணரும் தருணம்
"உணர்த்தினாய் வாழ்கையின் வலிகளை"
"உன் திருமண அழைப்பிதழ்
என்னும் காகிதங்களில்"...!!

அன்று முதல் பெண்ணே அழுகையால்,,
உன் நினைவுகள் கரைந்துவிடுமோ,,
என பயந்து பயந்து
"மறந்துவிட்டேன் என் அழுகையை"...!!

என் அறையில் நான் இருக்கும் தருணம்,,
"உணருகிறேன் உன்னை" ..!!
அதனால் தான் பெண்ணே,,
அடைபட்டு கிடக்கிறேன் என் அறையிலேயே....!!!

எழுதியவர் : அரவிந்த் .C (27-Dec-12, 4:56 pm)
பார்வை : 300

மேலே