உள் அன்பில் உவகை.
உண்மையான அன்பு என்பது,
உதடுகளைப் பிரிக்காமல்,
வார்த்தைகளை விரிக்காமல்,
உள்ளத்தில் ஒருமையுற்று,
எண்ணத்தில் வறுமையுற்று,
எங்கும் அலையாமல்,
எதுவும் வேண்டாமல்,
எப்போதும் மோனமுற்று,
ஆனவரை அமைதியுற்று,
அகமெங்கும் அற்புதமாய்,
அந்தமில்லா ஆனந்தத்தை,
சொந்தமாக்கிக் கொள்ளுவதே!
பாலு குருசுவாமி.