வள்ளுவன்
பதினெண் கணக்கில் உன்குறல் பதித்துள்ளாய்
பாமரர் நமக்கு ஏதும்
பார்த்தவுடன் விளங்குவதற்கு நீயேதும்
பதிக்கலையே தேவா
பாட்டும் உன் புகழும்
பாட மட்டுமே அறிவேன் யான் - உன்
பழந்தமிழ் யானறியேன் வள்ளுவா
தேனின்றும் இனிதாம்
தேவரின் எழுதுண்டமறையை
தெளிந்து கற்றிட தாகமாய் உள்ளதே
அழிந்து போகுமுன் நான்
வள்ளுவா!
நடுநிசியிலேனும் நீவந்து என்
காதோரம் செப்பாயா? - இல்லை
உன்னிடம் நான்வருவேன் உன்மறை படிக்க
அங்கு நீ இருப்பாயா?
கேட்டிட துடிக்கிறேன் உன்வாயால்
காலன் எனை கொண்டேனும் வருவானோ! - இந்த
பாலன் என்தமிழ் பசிதீர்க்க
வேலன் தான் வருவானோ!
வேண்டுகிறேன் அவனிடம்
வேண்டாமென்று செப்பிடாதே வள்ளுவா
வானேறிய தமிழன் காலத்தில்
வாழுகின்ற தமிழன் யான்
வந்திடுவேன் விரைவில்.