தீ குச்சி
.... வெறி கொண்ட
மனிதன்
ஒரு கொடிய
மிருகம் என்பதை
உணர்த்தி இருக்கிறது
உன் மரணம்...
இங்கு நடக்கும்
ஒரு வான் கொடுமையை
உலக்கு எடுத்து
உரைத்திருக்கிறாய்
உன் மரணத்தால்...
இனி
பெண்களுக்கு
முழு பாதுகாப்பும்
தாக்குபவர்களை தண்டிக்கவும்
கடும் சட்டம் வருமென
நம்புவோம்...
வெளியில் செல்லும் பெண்
பாதுகாப்பாக வீடு
திரும்பினால்
உச்சரிக்கட்டும்
உன் பெயரை
தாமினி...
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனிடம் வேண்டுகிறேன்...