அவமானத்தோடு கண்ணீர் சிந்தும்...

எழுத வேண்டும்...
நிறைய எழுத வேண்டும்...
ஒவ்வொரு வார்த்தைகளாலும்,
அந்த அறுவரையும்
குத்திக் கிழிக்க வேண்டும்.

ஆனால்,
எதையும் எழுதும்
மனமில்லை எனக்கு.

அவளின் வேதைனையை
நினைத்துப் பார்த்தால்...
அம்மம்மா......................
நாம் வலியை மட்டுமே
அனுபவிப்போம்.
பாவம் மருத்துவச்சி
காரணங்களும் தெரிந்திருக்கும்.

நல்லவேளை
அன்பு சகோதரி
இன்னுயிர் நீத்தாள்.

எனதன்பு சகோதரியே...
அருவருக்கத் தக்க
ஆறு மிருகங்கள்
உன்னைத் தீண்டின.
அந்த வேதனையை
நிச்சயம் உன்னால்
அழுது தீர்க்க முடியாது.
ஆகையால்,
உனக்காக
எத்தனைக் கோடி
இந்திய சகோதர சகோதரிகள்...

இயலவில்லை...
நட்பே....
இது கவிதை அல்ல..
கண்ணீர் அஞ்சலி.

எழுதியவர் : G S வாசன் (29-Dec-12, 2:31 pm)
பார்வை : 242

மேலே