பெண்ணுரிமை

பெண்ணுரிமை மசோதா!
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா!
இவைகளெல்லாம் எதற்காக!!??

பெண்ணுரிமையை பிணமாக்கி
ஓட்டுரிமையை பணமாக்கி
ஆட்சியை தன்னகத்தாக்க
செய்யம்படும் கபட நாடகமன்றோ-
வேறில்லை!!

யசோதாவை தரிசிக்கும்
இத்திருநாட்டில்
எதற்காக இம்மசோதாக்கள்!!??

மனிதநேயத்தை நிலை நிறுத்தினாலே
அவர்கள் உரிமையை
அவர்களே பெற்றுவிடுவார்களே!!
அப்படி நடந்திருந்தால்
டெல்லி சம்பவம்தான்
நடந்திருக்குமா?!!

அரசுக்கு மனிதநேயமோ, நியாயமோ
இருந்தால்தானே-
மக்களுக்கு இருக்கப்போகிறது!!

ஆமாம், இவர்கள் மாக்களாகிதான்
வெகுகாலங்கள் ஆகிவிட்டனவே!!

லங்கயில் எங்களின் ஆயிரமாயிர
இரெத்தபந்தங்கள்
பலாத்காரம் செய்யப்பட்டு
யார்வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்களென்று
முண்டமாக சாலையில்
அலையவிட்டபோது
உதவிய நாய்கள்தானே நீங்கள்!!

எப்படியிருக்கும்
உங்களுக்கு மனிதநேயம்!??

எழுதியவர் : sakthi (29-Dec-12, 2:35 pm)
சேர்த்தது : சக்திவேல் காந்தி
பார்வை : 165

மேலே