வெட்கக்கேடு

கடந்த ஒரு வாரமாக தலை( நர)நகரம் டெல்லியில்
கொழுந்து விட்டு எரிந்த மாணவியின் பலாத்காரப் பிரச்சினை இன்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
முடிவு என்றால் மிகக் கோரமான முடிவு. அதாவது
மாணவியின் மரணத்தில் முடிந்திருக்கிறது.

ஒரு நாட்டின் தலைநகரத்தில் அதுவும் ஓடுகிற
பேருந்தில் ஒரு மாணவியைப் பலாத்காரம் செய்து
மரணத்தில் தள்ளியிருக்கிறார்கள் .

நினைக்கவே நெஞ்சம் வெட்கத்தில் வேதனையில்
விம்மி வெடிக்கிறது!அனைத்து வீடுகளிலும் பெண்கள் .தாயாய்.சகோதரியாய்,மனைவியாய்,இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.
அனைத்து நாடுகளும் இந்தியாவையும்,அதன் கலாசாரத்தையும் வெகுவாகப் புகழ்ந்து தள்ளி,
இந்தியாவுக்கு வர விரும்பும் நிலையில்
தலைநகரத்திலேயே இப்படி ஒரு கேவலமான வெட்கக் கேடான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது எனும்போது ,இந்தியாவில் பிறந்து இந்தியக் காற்றை சுவாசித்து வரும் நமக்கே இப்படி ஒரு கேவலமாக இருக்கும்போது வெளி நாட்டினர் எப்படி நம்மைப் பற்றி நினைப்பார்கள்.
இது நாடா?இல்லை சுடுகாடா?இதற்கெல்லாம் என்ன காரணம்? கட்டற்று விடப்பட்ட அந்நியக் கலாட்சாரமும் அந்நிய நாடுகளின் ஆதிக்கமும் அல்லவா?
நமக்கு வாய்க்கும் மத்திய அரசோ மேலும் மேலும் ,அந்நியக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக அல்லவா நடந்து கொள்கிறது.
இந்த மாதிரி நிகழ்வுகள் அனுதினமும்,அனைத்து நகரங்களிலும் ,சின்னஞ்சிறு ஊர்களிலும் கூட நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பெரிய மனிதர்களின் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள்.
இதுபோன்ற ஒரு கேவலமான செயலை ஒரு சுப்பனோ,குப்பனோ.செய்திருந்தால் சும்மாவா விடுவார்கள்?
நாட்டின் சட்டங்கள் அனைத்தும் சாமாநியனுக்குத்தான்,திட்டங்கள் மூலம் வருகின்ற வருமானம் மட்டும் பெரும் பண முதலைகளுக்கு,என்றுதானே நடைமுறையில் உள்ளது.
பெற்றோர்களே !உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்,உங்கள் குழந்தைகளுக்கு,பெண்ணின் பெருமைகளை,நம் நாட்டின் பழைய வரலாறுகளையும் கலாச்சாரங்களையும் ,நீதிக் கதைகளையும் கற்றுகொடுங்கள்
நம் வருங்கால வழித் தோன்றல்கலாவது நல்லவர்களாக வளரட்டும்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (29-Dec-12, 2:42 pm)
பார்வை : 106

மேலே