பெண்ணே...

இருக்கும் வரை கண்டுகொள்ளாத அவளை ..
இன்று கண்ணீரோடும்,அனுதாபம் கொண்டும்
ஆராதிக்கும் மனிதர்கள்...
அவளோ...
ஏளனத்தோடு சிறிது கொண்டே போகிறாள்...
பெண்ணினத்தை பார்த்து...
என் நிலை தான் உங்களுக்கும் என்று...
சரி தான் இருக்கும் பெண்களை எல்லாம் இப்படி சீரழித்து விட்டு பின் எந்த பெண்ணோடு தான் உறவாடுவான்...
வாய் கிழிய பேசுபவர்கள் எல்லாம் இதற்கு என்ன பதில் சொல்ல கூடும்...
கேடு கேட்ட இறைவனும் கூட இந்த வெறியாட்டத்திற்கு உடந்தை ...
எப்படியே அழிவின் ஆரம்பம் தான் போலும்...
அவள் எப்படியோ நாராசமான இந்த மக்களிடம் இருந்து விடை பெற்று கொண்டாள்...
பெண்ணே அங்கேயாவது உனக்கு அமைதி கிடைக்கட்டும்...

எழுதியவர் : வைசா (29-Dec-12, 4:29 pm)
சேர்த்தது : samu
Tanglish : penne
பார்வை : 206

மேலே