என்ன சொல்ல...
ஐந்தறிவு படைத்த
விலங்கினத்தில் கூட இந்த வெறியாட்டங்கள் கிடையாது...
ஆறறிவு படைத்த மானிடனே...
உனக்கு ஏன் இந்த ஈன செயல் ...
உன் தாயோடும்,தங்கையோடும் உறவு வைத்து கொள்ள நீ விரும்புவாயா...
அவளின் ஆபாச உடை என்னை அப்படி தூண்டி விட்டது என்று அவளை குறை சொல்கிறாயே...
அடேய் ...
நீ உன் வேலையை பார்த்து கொண்டு போகாமல் எதற்காக அங்கே பார்க்கிறாய்...
நீ சாதிக்க வேண்டியவை உனக்காக அங்கு காத்திருக்க...
அவளை பார்த்து..அவள் பின்னே சென்று...
உன்னையும் சீரழித்து கொண்டு அவளையும்,அவள் வாழ்வையும் சீரழிக்கிறாய்...
நீ ஒன்றும் புத்தனாக வேண்டாம்..அவன் சொல்லி சென்ற வரிகளை கடை பிடி..
நீ ஒன்றும் மகாவீரர் போன்று ஆகா வேண்டாம்..
அவன் சொல்லி சென்றவற்றை கடை பிடி...
வாழ்க்கை என்பது எத்தனை அழகான ஒன்று...
அதனை...
இப்படி சிற்றின்பத்திற்காக ஆசைப்பட்டு..
உன்னை நீயே சிதைத்து கொள்ளாதே...
ஆணுக்கும் சரி,
பெண்ணுக்கும் சரி...
நமக்கென்று செய்து முடிக்க வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்க...இது போன்ற வீண் வேலைகள் நமக்கெதற்கு..
- யாருடைய விமர்சனத்திற்கும் இதை நான் போட வில்லை,என் மனதில் பட்டதை சொல்லிருக்கிறேன்,எனது தனிப்பட்ட கருத்து,விமர்சனதிர்க்கோ,விவாததிர்க்கோ அல்ல...இதை குறித்து யாரும் என்னிடம் விவாதிக்க வேண்டாம்...

