நாம் வளர்த்த பிச்சை..

கரமிருக்க கால்களிருக்க,
குறையில்லா உடல் வளமிருக்க,
தரையோடு தட்டு வைத்து,
மன நிறைவோடு இரவல் செய்தால்,
உண்ணும் உணவு செரிப்பதெப்படியோ..

இயலாமையால் இங்கு இரவவில்லை,
முயலாமையால் ஈட்டும் இரவலிது..
நஞ்சாய் வளர்ந்தது அலட்சியப் போக்கு,
வளர்த்துவிட்டப் பெருமை நம்மையே சேரும்..

கோயில்களின் வாயில்களில்,
சாயும் கால வேளைகளில்,
கடவுள் பெயர் சொல்லி அமர்ந்தால் போதும்,
இறை மூடர்கள் பலருண்டு, அது அவர்களுக்குப் போதும்..

மானம் மறந்து வாழ்வோரை,
நாளும் இரந்து வாழ்வோரை,
மேன்மையிட்டு இரவலளித்து,
மேதை(இறை ஞானி) போலப் போற்றிடுவோம்..

பெற்ற பிள்ளை சோறு புசிக்க,
பறிதவிக்கும் தந்தைகள் பலரிருக்க,
பெற்ற சிசு பிச்சை ஈட்ட,
வெட்கமில்லை அதைக் கொண்டு மதுவை உள்ளிறக்க..

ஊனம் கொண்டு ஊன்றிட்டு,
பார்வையற்று பேதலித்து,
நாளும் வாழ்ந்து வருபவரெல்லாம்,
மானம் காத்து இரவலை இறக்கச் செய்யும் இம்மண்ணிலே,
காலம் பெற்றெடுத்தது ஈனமான இவர்களையும்..

இழிந்த இவர்களை,
செழித்து வாழ வைப்பது நாமே..
இந்நிலை இன்னும் தொடர்ந்தால்,
வளராது இந்த நாடே.....!!!!

எழுதியவர் : பிரதீப் (30-Dec-12, 6:31 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 84

மேலே