" நான்தான் இருக்கேன்ல..!!." !

"சுகமானவை
சோம்பல் கம்பளிக்குள்
இழை பின்னாதவை...
அயற்சி அங்குச குத்துக்கள்
பெறாதவை....
தோல்வி தோல்
போர்த்திக்கொள்ளாத
சுவைக் கனிச்சுளை... "
.......கூவி கூவி விற்றுப் பார்த்தேன்
தோள்களூக்காக
இதுவரை நான் சுமந்த
சுமை ஏற்க.....!!

மகனைக் கேட்டேன்..,.
"இனிதான் வாழ்க்கை
இனிமை அளிக்கக் காத்திருக்கிறது ..."

மனையாள் மொழிந்தாள்
"நான்தான் உன்னில்
பாதியாய் வாழ்ந்து விட்டேனே..."

"சுமையோ சுகமோ
சுமந்திட எனக்கொரு வீடுள்ளது ..."
மகளும் சென்றாள்..

தோழனிடம்
என் வினா விடை பெறும் முன்
கவிதைகள் என் விரல்களுக்குள் .....
அதன் ஓசை கிசுகிசுப்பாய்..

" நான்தான் இருக்கேன்ல..!!."

எழுதியவர் : அகன் (30-Dec-12, 6:38 pm)
பார்வை : 124

மேலே