உடன்படிக்கை...
நாள்தோறும்
சேவல் எதனுடன்
செய்திருக்கிறான் சூரியன் ஒப்பந்தம்
தனக்கான பராக் இசைக்க....?
குயிலிடமா உடன்படிக்கை
இல்லாததைத் அறிவிக்க ...?
மழைத்துளியோடு ஒப்பமா
தனது சிதறலில் வானவில் உருவாக்க...??
பதில் அளிக்க இயலா
காலம்
என் காதில் சொல்லி போனது இப்படி...
"பசிக்கும் காலியறையும்
பொத்தல் போட்ட
கஞ்சிக்குவளையும்
ஏழைகளுக்கு மட்டும்
சாசுவதம் ஆக்கிய வேதம் எதுவோ,
ஆண் மட்டுமே
பெண்ணைப் போகப் பொருளாக்கிட
அதிகாரம் அளித்து
சாசுவதமாக்கிய
வேதம் எதுவோ ...
அதுவே..!!!! "
சாயும் முன்
ஆயுதம் எடுக்க விரல் குவித்தேன்...