டெல்லி சகோதரிக்கு சமர்ப்பணம்

(இயற்கையோடு கலந்த டெல்லி சகோதரியே கூறுவதாய் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த கவிதை)

மதியழந்த மந்திகள்
மரம்விட்டு நகர்வந்து
மலரொன்றை பயணத்தின்போதே
பிய்த்தெரிந்து சாலையில் வீசின!

ஏ மனிதர்களே!
மனம்கொண்டவர்கள்தான் மனிதர்கள்
நீங்கள் யார்....?

நீ பிறந்த போதே -- உன்
தாயின் உறுப்பை கிழித்தாயே
அது போதாதா.....?

காமவெறியே பல
கொலைகளுக்கு சமம் -- அதிலும்
ஏனடா கொலைவெறி....

நீ கிழிக்க வேண்டியவை
எத்தனையோ இருக்கிறது -- அதைவிட்டு
ஏனடா இதை.....?

உன்தாய் உனக்கு சொன்னதில்லையா
பெண்ணிடம் பழகும்முறை பற்றி --இல்லை
உனக்கு தாயும் அவள்தானோ....?

என்னைக் கிழிக்க உனக்கு
ஒருநாள் வந்தாற்போல் -- உன்னை
அறுக்க எனக்கும் ஒருநாள் வரோதோ....?

நான் துணையோடு வந்தபோதே
என்னை துளைத்தீர்களே -- தனியாகபோகும்
எத்தனையோ பெண்களின் நிலைமை.....?

எனக்காக தெருவில் இறங்கி
போரட்டம் நடத்தும் அத்தனைப்
பேருக்கும் என் நன்றிகள்

ஆனாலும்
நான் சாலையில் வீசப்பட்டபோதோ
காவலர் வரும்வரை
யாரும் வரவில்லையே -- இன்னும்
சட்டம் திருத்தப்பட வேண்டுமோ...? -- இல்லை
மக்கள்மனம் திருத்தப்பட வேண்டுமோ...?

எனக்கு நீதி என்பது
அறுவரின் தூக்கில் அல்ல!
இனியொருமுறை இப்படி
நடக்காமல் தடுப்பதிலும் அல்ல!
இப்படியொன்றை இனி
எப்போதும் எவரும்
செய்வதில்லை என்பதில்தான்...

என்ன? எனக்கு
நீதி கிடைக்குமா........?

இப்படிக்கு

பெயர்சொல்ல முடியாத ஒரு இந்திய மகள்

எழுதியவர் : அலெக்சாண்டர் (30-Dec-12, 8:42 pm)
பார்வை : 100

மேலே