உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)...!

சேலைகட்டிய செங்காந்தள் அரசியாய்
அரிசி விளைந்த நிலமெல்லாம்
செங்கல் முளைத்து, வெயிலில் காய்வதோ ?
கழனிகள் உடைத்துக் கடைந்து
கட்டிட காடுகள் செய்வது நம்கடன் !

உலக அரசியலின் ஒருபத்தியாய்
மரபணு பிறழ்பித்த - மலட்டரிசி
விதைத்தோம் - அறுப்போம்
வேண்டாத விளைவுகளை !

இயற்கை எருக்கள் ஏராளமாயிருக்க
ஏமாந்து வேதிபொருட்களை - வேரில்
எறிகிறோம் - வேரோடு கருவருக்கிறோம் !
அமில-கார சமநிலை உடைத்து - நம்
மண்ணை நாமே மலடாக்கினோம், நாம் குருடாகி !

விளைவித்தவனுக்கு வெறும்கை கொடுத்தோம் !
விலை வைத்தவனுக்கு விருந்தைக் தொடுத்தோம் !
குருதி உதிர்த்து, நெற்றி வியர்த்து
உறுதி படைத்து - விளைவித்தவன்
சிறுத்துக் கிடக்கிறான், யாரோ உதறிய சிறகாக !
உச்சியில் உட்கார்ந்துகொண்டு - உழவனின்
வெற்றியை விற்று காசுபார்க்கும் முதலாளி, சிரித்துக் கிடக்கிறான், முற்றிய பெருச்சாளியாய் !
உழவையும், உழவனையும் காப்பாற்றாவிடில்
மாயன் நம்மை வெல்வான், வெகு எளிதாக !

எழுதியவர் : வினோதன் (2-Jan-13, 1:24 am)
பார்வை : 139

மேலே