சமூகம் நிர்ணயித்த விலை
அவளும் அப்படித்தான் ,
காதல் கூடாது
காதலிப்பவர்கள் மூடர்கள் .
காதல் காதல் என்று
ஏன் இப்படி அலைகிறார்களோ தெரியாது
என்று காதலரையும்
காதலையும் திட்டிக்கொண்டிருந்தாள்
காதலாம் காதல்
இதை கல்யாணம் செய்து
செய்து கொண்டால் என்ன
குறைந்துவிடவா போகிறது,
காதல் காதல் என்று
இப்படி கண்ட கண்ட இடத்தில்
நாகரீகத்துக்கு பங்கம்
விளைவிகிரான்களே என்று
வருத்தப்பட்டு கொள்வதை கேட்டு
அவள் பெற்றோர் பூரித்துப் போவார்கள்
மகளின் உயர் குணம் எண்ணி
பதினாறு வயதில் தொடக்கி
இருபத்து ஐந்து வரை
இப்படிச்சொல்லிகொண்டிருன்தவள்
சொன்னவர்கள் யாவரும்
திருந்திடாமல் புதுபுது
வழிகளில் புதுமையாய் காதலித்து
கைசேர்ந்ததை பார்த்து
சொல்லும் நான் சன்னியாசியாய் இருக்க
கேட்கும் அவர்கள் சம்சாரியாய் மாறிக்கொண்டுதானே உள்ளார்கள்
இனி நானும் அவர்கள் வழியை
பின்பற்றலாமே ...
தீர்மானித்தாள்
தீர்மானித்த மறுகணம்
ஏராள விண்ணப்பங்கள்
வந்து குவிய திக்குமுக்காடினாள்
ஒவ்வொன்றையும்
அலசி ஆராய்ந்த போதுதான்
பருவம் தாண்டிய பயணதிற்குள்
உருவம் சிதைந்த முதுமைக்கு
சமூகம் நிர்ணயித்த விலை
சீர்வரிசை என்னும்
சீர் கெட்டத் தனம் !