யோக நிலை
யோக நிலை அறிய முயன்றேன்
சிலை வழிபாடென்றோர் சிலர்
சிவநிலை என்றோர் சிலர்
தவ நிலை என்றோர் சிலர்
நிலைகுலைந்து அறிவோடு அங்கலாய்த்தேன்
மூன்றும் சரி என்றது உள் நிலை உணர்வு-ஆம்
தவ நிலை தனில் சிலை நிலை கலந்து உணர் நிலை
கடந்தால் சிவ நிலையாம் ஜீவநிலை
சிந்தித்து பயனிலை !