உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் கவிதைப் போட்டி )
ஊர் ஊராய் ஊறிவரும்
..ஊற்றெல்லாம் வற்றிப் போச்சி
கார் மேகக் கூட்டமதன்
,,கருணைமழை ஓய்ந்து போச்சு
ஏர் பிடித்து உழுவோனின்
,,இதயத்திலே சோகமாச்சு
ஓர் வழியும் இல்லாமல்
..உருகிநிற்கும் நிலையு மாச்சு
கன்னடத்து கைதியென
..காவேரி ஆகிப் போச்சு
பின்னேயந்த கேரளத்து
..பெரியாறும் கருகிப் போச்சி
முன்னெடுத்துச் செல்வதற்கு
..முற்பட்ட உழவனுக்கு
மின்சாரத் தடைவந்து
..முட்டுக்கட்டை போடலாச்சு
பரம்பரையாய் உழவுசெய்து
..பழகிவிட்ட உழவனுக்கு
உரமூட்டி கைகொடுக்கா
..உள்நாட்டு நீர்வளங்கள்
சிரமமதை வழங்குவதால்
..சீர் உழவும் சிறப்புழவனும்
மரணத்தின் விளிம்பினிலே
..மண்டியிடும் நிலையுமாச்சு !
..
..