*************இலக்கிய முரசு************திரு.அகன்(எ)அமிர்த கணேசன்.

எழுத்துலகின் எம் தோழமைச் சொந்தங்களே..!

திரு . அகன் (எ) அமிர்த கணேசன் ஐயா அவர்களுக்கு என்ன பட்டம் வழங்கலாம் என்று உங்கள் அனைவரிடமும் கேட்டிருந்தேன். பலர் பல பொருத்தமான சிறப்பான பட்டங்களை பரிந்துரை செய்தீர்கள்.
மிக்க நன்றி தாங்கள் அனைவருக்கும்...

திரு அகன்(எ) அமிர்த கணேசன் ஐயா அவர்கள் எழுத்து தளத்திற்க்கு வரும் புதிய பழைய எழுத்தாளர்களை வார்த்தைகளால் ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், செயலால் ஊக்கம் தந்து பலரின் எழுத்துக்களுக்கு நூல் வடிவம் கொடுத்தவர். மேலும் இத்தளத்தில் அண்மையில் படைக்கப் பட்ட சிறந்த ஐம்பது கவிதைகளை தேர்ந்தெடுத்து பரிசும் பாராட்டும் வழங்கியவர், மேலும் படைப்பாளிகளாகிய நமது தோழமைகளுக்கு பட்டங்கள் வழங்கி அழகு பார்த்தவர்.
அவர் தளத்திற்குள் மட்டுமல்லாது வெளியிலும் தமிழ் இலக்கியத் தொண்டாற்றும் பேரொளியாக திகழ்வதால். உரத்த குரலில் இலக்கியத்தை காக்க குரல் கொடுப்பதால் அவருக்கு "இலக்கிய முரசு" என்னும் பட்டம் கொடுத்து சிறப்பு செய்வதே சிறப்பான ஒன்றாக தோன்றியது. இது பல தோழர்களின் கருத்தை கேட்டு ஆலோசித்து அவர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் , மற்றும் உள்ள நமது எழுத்து சொந்தங்களின் சார்பாகவும் திரு. அகன்(எ) அமிர்த கணேசன் ஐயா அவர்களுக்கு இப்பட்டத்தை வழங்குவதில் பெருமை கொள்வோம்.

தன்னலம் பாராது தமிழ் தொண்டாற்றும் தமிழ் பெருமகனை வாழ்த்துவோம் வாரீர்........
தங்கள் வாழ்த்துக்களை "இலக்கிய முரசு"
ஐயா திரு.அகன்(எ) அமிர்த கணேசன் அவர்களுக்கு கூறலாம்.

############# ##############
############# " இலக்கிய முரசு" ##############
############# ##############

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Jan-13, 7:50 am)
பார்வை : 243

மேலே