வாழ்க்கையும் கணக்குதான்

நல்லதைக் கூட்டி நல்லவராகி
தீயவற்றை கழித்து பண்பாளராய்
நேரத்தை வகுத்து நேர்வழியில்
அறிவைப் பெருக்கி அறிவாளியாகி
கண்ணியமுடன் வாழ்ந்தால்
இன்றைய தலைமுறையே
உலகம் உங்கள் கையில் !
படிப்பதைக் கூட்டினால் பொதுஅறிவும்
வழிமுறையை வகுத்தால் நெறிமுறையும்
தீயதைக் கழித்தால் தீட்டிய வைரமாய்
ஆற்றலைக் கூட்டினால் அறிவொளியாய்
அகிலத்தில் நீங்களும் அப்துல் கலாமாக
உயர்ந்திடலாம் ! மிளிர்ந்திடலாம் !
பழனி குமார்