புதிய மனிதா !
வா வா மனிதா
சமுதாயம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது
உன் தோல் கொடுத்து சீர்திருத்த வா !
அறிவியல் வளர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
ஆனால் கலாச்சார விழுச்சி
நம் நாட்டிற்கு சேர்க்கபோகிறது
இகழ்ச்சி என எடுத்துரைக்க வா !
இயற்கை வளங்கள் கொண்ட நம்
நாட்டில் மலைகள் சேர்க்கிறது ஒரு பங்கு !
ஆனால் மலை மலையாய் குப்பைமலை உருவாகி
நகர்புறங்கள் நாசமாகி கொண்டிருக்கிறதே அது
மக்களுக்கும் சுற்றுபுறதிற்கும் தீங்கு ! என்பதை
வலியுறுத்த வா !
பால் விலையும் உயர்கிறது
பாலியல் கொடுமைகளும் அதிகமாய் தலை தூக்குகிறது
பசுவினையும் பெண்களையும் தெய்வமாய்
வழிபடும் நாடு இது என அறிவு புகட்ட வா !
தருமங்களும் புண்ணியங்களும் சேர்த்த இந்த
தொண்மை வாய்ந்த நாட்டில்
தீவிரவாதமும் புது புது நோய்களும் உருவாகி
மக்களை வேதனைக்கு உள்ளக்கி கொண்டிருக்கிறதே அதை களைந்திட வா !
வெளிநாட்டு வாசத்தில் வசப்பட்டு அதன் மோகத்தால் உயிர் வாழும் மக்களுக்கு அது சத்துள்ள வாழ்க்கை அல்ல நம் நாட்டில் உள்ள தொன்மையான நடைமுறைகளும் தானியங்களும் ஒழுக்கங்களுமே நம்மை வலிமையாகவும் தூய்மையாகவும் வைத்துகொள்ளும் என நிரூபிக்க வா !
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையெனில் நம் அனைவருக்கும் தாழ்வு " என்ற சொற்களை செயலில் காட்ட முதலில் நம் அனைவரது அறிவுக்கண்ணில் இச்சிந்தனைகள் இணைந்து பிரதிபலிக்க விழிப்புணர்வு கொண்டு வர வா !