வாழிய தமிழ் வாழிய தமிழ் வாழிய வாழியவே!!!!

தமிழ் கவி இயற்றினேன்
களிப்பில் ஆழ்ந்தேன்
சிந்தையில் சுரந்த தமிழால்
சிலிர்ப்பில் வியந்தேன்
கற்பனை ஊறியது என்னுள்
தமிழ் கவித்தேன் தெளித்தது
புது உணர்வுக்கு வணர்புட்டியது
ஆண்மையை மெருகேற்றியது
தேகத்தை சிலையாக்கியது
ஜீவனை சிவனாக்கியது
மூப்பினை உடைத்தெறிந்தது
முக்திக்கு வழிகாட்டியது
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே
வாழ்வின் துயரங்கள் யாவும்
மண்டதுவே -வாழிய தமிழ் வாழிய
தமிழ் வாழிய வாழியவே !
குறிப்பு : தமிழ் பிழை இருப்பின் மன்னிக்கவும் கார்த்திக் (திருநெல்வேலி)