என்னை கவர்ந்த

சுற்றுலா கட்டுரை - என்னை கவர்ந்த பினாங்

முஹம்மது நிஜாம் B.E

விமானம் பினாங் தரைய்ரிறேங்கும்போது காணும் அழகே சொல்ல வார்த்தை இல்லை. நீல கடல் சுற்றி மலைகள் இயற்கை வனங்கள். எனது ஆருயிர் மலாய் நண்பர் கலீத் அல் பஷ்ராவியின் விருந்தினராக சென்றிந்தேன். பினாங்கை வெள்ளைகாரர்கள் Pearl Of Asia என்று செல்லமாக அழைத்தார்கள். பினாங்கை சுருக்ககமாக சொல்லவேன்றும் என்றால் பழமை, புதுமை, இயற்கை கலந்த சொர்க்கபுரி. ஏனென்றால் ஒரு கிலோமீட்டரை கடக்கும்போது வானளாவிய கட்டடங்கள் அடுத்த ஒரு கிலோமீட்டருக்கு பழமைவாய்ந்த கட்டடங்கள் அடுத்த ஒரு கிலோமீட்டருக்கு இயற்க்கை கலந்த கடல். எனது கணிப்பின்படி இப்படி அமைந்த நகரங்கள் உலகத்தில் மிக குறைவு.

பொதுவாக ஐ. நா கலாச்சார அமைப்பு (UNESCO ) ஒரு கட்டடம் அல்லது ஒரு சிறிய இடத்தைத்தான் புரதான சின்னமாக தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் பினாங்கின் அழகையும் பெருமையும் அறிந்து நமது தூத்துக்குடி மாவட்டம் அளவில் உள்ள ஜார்ஜ் டவுன் என்ற முழு இடத்தையும் புராதன சின்னமாக பிரகடனம் செய்துவிட்டார்கள்

Blue Mansion
உலக புகழ்பெற்ற பத்து மன்சன்களில் ஒன்றான புளு மன்சன் இங்குள்ளது. இது அந்நாளைய சீன பெரும் செல்வந்தரில் ஒருவரான Chong Tze என்பவரால் கட்டப்பட்டது. அவருக்கு 8 மனைவிகள். ஆதலால் 38 அறைகள் கொண்டு கட்டப்பட்டது. இந்த மன்சனின் சிறப்பு எனனவென்றால் இரு பகுதிகளும் symmetry ஆகா உள்ளது.



Pinang Mountain Rail
பினாங் மொவுண்டன் இரயில் உலக புகழ்பெற்றது. சில நிமடங்களில் இரண்டாயிரம் அடிக்கு எடுத்து செல்லும் விதம் மலேசியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துகாட்டாய் விளங்குகிறது. உலக புகழ்பெற்ற பட்டு பிரிஞ்சி கடற்கரை இங்குள்ளது. பார கிளைடிங் போன்ற விளையாட்டுகள் கண்ணை கவருகின்றது

BATU FRINGGII BEACH

KOMATA TOWER

போக்குவரத்தை பற்றி சொன்னால் kolalampuraiக் காட்டிலும் ரெம்ப மலிவாக உள்ளது. பணக்காரர் முதல் பாட்டாளி வரை குளிருட்டப்பட்ட சொகுசு நகர பெருந்துக்கலையே பயன்படுத்திறார்கள். 101, 102, (பட்டு பீச், TOY மீசியம்) 204(மௌண்டன் ரயில்) போன்ற நம்பர் பேருந்துகள் நகரத்தின் மூளை மூலை முடுக்கெல்லாம் செல்கிறது. கொம்டா டவர் பினாங்கின் வழிகாட்டு அடையாளமாக விளங்கிறது. இங்குதான் மிக பெரிய பஸ் TERMINAL உள்ளது. இங்கிருந்துதான் சுற்றுலா தளங்களுக்கு பஸ் மாற வேண்டும். இதன் அருகில் புகழ்பெற்ற ப்ரங்கின்ஸ் மால் உள்ளது.

எங்கு பார்த்தாலும் சீனர்கள் தமிழர்கள் மலாய் மக்கள் இணைந்தே செயல்படுகிறார்கள். இந்திய உணவகத்தில் சீனர்களையும் சீன மலாய் உணவங்களில் தமிழர்களையும் காண முடிகிறது. மலேசியாவின் அசுர வளர்ச்சிக்கு இதுதான் காரணம் என்று நம்புகிறேன். Roti channa ரோடி சானாய் எனும் நமதூர் சப்பாத்தி குருமா பிரபலமான உணவாக விளங்கிறது. அதை சீனர்கள் மலாயா மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.


ABC ICE CREAM
தமிழர்கள் பிரபலமான மலாய் உணவான நாசி லச்மாவை (அதாவது நமதூர் தேங்கா சோறு போன்ற சுவையில்) விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்னொரு ருசிகரமான தகவல். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது சாப்பிடும் ஐஸ் கட்டியை சீவி கலர் போட்டு தயாரிக்கும் அதே ஸ்டைலில் மலாய் ஐஸ் கிரீம் ஒன்று நண்பர் காலீத் வற்புறுத்தல் பேரில் சாப்பிட்டேன். அதற்க்கு பெயர் ABC அதாவது மலாய் மொழியில் A என்றால் AIR ஐஸ் கிரீம் B என்றால் பட்டு தமிழில் தேங்க பால் C என்றால் சம்பங் தமிழில் கலவை மிகுந்த சுவையாக இருந்தது.லிட்டில் இந்தியாவில் புதுகொட்டைக்காரர் தாவூத் எனும் உணவகம் நடத்துகிறார்கள். சீனர்கள் 90 வயது இருக்கும் சர்வசாதரனமஹா தனித்தனியே பஸ்ஸில் போவது ரிக்சா ஓட்டுவது ஆச்சர்யமஹா இருந்தது. பினாங் இல் 5நாட்கள் ஒரு குப்பை துசி பார்க்கவில்லை அவ்வளவு தூய்மையாக வைத்துள்ளர்கள்.

அரிதாக காணப்படும் Toys மியுசியம் இங்குள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் வகையில் கார்டூன் கதாபாத்திரங்கள் சீன உடை அலங்காரம் ராணுவ வாகனங்கள் என்று பலதரப்பட்ட இலட்சகணக்கான Toys பார்வைக்கு வைத்திருகிறார்கள். மற்றொரு சுவையான விஷயம் பினாங்கு ரிக்சா சுற்றுலா பயணிகளை கவர்ந்திளிக்கிறது. சவாரி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிக்சாவில் சவாரி செய்தது இனிமையான அனுபவம்.



நண்பர் காலித் ஹோட்டல் ஒரிஎண்டல் என்ற முன்னுறு வருட பழைம வாய்ந்த ஹோடலேகு அழைத்து சென்றார்கள். அங்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆளுயுர போட்டோவை வைத்திருந்தார்கள். சமிபத்திய ஹிட் பாடலான கொலைவெறியை பிரதமர் நஜிப் விரும்பி கேட்கிறாராம். மலாய் மக்கள் தமிழர்கள் மேல் கொண்ட பாசத்துக்கு அடையாளமாக விளங்கிறது.

நண்பர் காலிதை பற்றி சிறு குறிப்பு. காலித் கோலாலம்பூரில் வளர்ந்தவர். அவரது தகப்பனாருக்கு 95வயது ஆகிறது. அவர் இராக் அல்பஸ்ராவில் இருந்து வந்தவர்கள். தாயார் தென்னப்ப்ரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள். பினாங்கில் பொறியியல நிதி ஆகியவற்றில் பட்டம் பெற்று மலேசியா ஆயில் கம்பனியில பணிபுரிந்தவர். மலேசியா மன்னர் குடும்பம் முன்னால் மலேசியா பிரதமர்கள் மகாதிர் பத்ராவி மலாயா பினாங்கு தமிழர் அமைப்புகள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். தமிழகம் உள்பட நூறு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டவர். ஏர் ஏசியா சேர்மன் திரு பெர்னாண்டஸ் நெருங்கிய நண்பர்

இறுதியாக நண்பர்களே இக்கட்டுரை பினாங்கை ஏற்கனவே பார்த்தவர்களுக்கு ஒரு இனிமையான நினைவுகள். பார்க்காதவர்களுக்கு எத்தனை தடவைதான் ஊட்டி கொடைக்கானல் கேரளா மைசூர் என்று அலுத்துவிட்டோம். பணத்தை கொஞ்சம் விட்டெறியுங்கள். (Alert உங்கள் தேவைக்கு அதிகமா பணம் இருந்தால் பிள்ளைகள் சோம்பெரியாகிவிடுவார்கள் ஹி ஹி ) பினாங் செல்லுங்கள். பினாங்கை ரசித்து அனுபயுங்கள். வாழ்கையை அனுபவியுங்கள். அனுபவியுங்கள். நன்றி

எழுதியவர் : nizaam (3-Jan-13, 5:25 pm)
சேர்த்தது : nizaam
பார்வை : 268

மேலே