$$ என் தமிழன் $$

என் தமிழன்.......... என் தமிழன்........
தலைகனம் இல்லா தன்மை பெற்றவன் ...........
தன்னிடம் தஞ்சம் கொண்டோரின்
தாகம் தணிப்பவன் ...........
உழவு கொண்டு பல உயர்வை பெற்றவன்...............
கர்வம் என்பதை கருவிலே கலைத்தவன்........
உண்ணும் உணவை உலகிற்கு அளிப்பவன் ..............
தானம் என்பதை தரணிக்கு தந்தவன் ..........
பகைமை அனைத்தையும் பந்தாட பிறந்தவன் ......
பாசம் என்பதை தாய்பாலாய் பருகியவன் .........
வீரம் என்பதை விதையீலே பெற்றவன்.....
மானம் என்பதை உயிராய் மதிப்பவன் ...........
என் தமிழன்........ என் தமிழன்...............